/

அரசு பஸ் மீது கல்வீச்சு: கண்ணாடி சேதம்

திருநெல்வேலியில் அரசு பஸ் மீது கல்வீசித் தாக்கிய இரு

News image
Updated On :3 அக்டோபர் 2012, 12:34 pm

dinamani

திருநெல்வேலியில் அரசு பஸ் மீது கல்வீசித் தாக்கிய இரு இளைஞர்களை போலீஸôர் தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ் திங்கள்கிழமை இரவில் புறப்பட்டுச் சென்றது. பாளையங்கோட்டையை சேர்ந்த  பொன்ராஜ் என்பவர் பஸ்ûஸ ஓட்டிச் சென்றார்.

அந்த பஸ் வண்ணார்பேட்டை  மேம்பாலம் அருகே வந்தபோது ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதுவதுபோல் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மோட்டார் சைக்கிளில் சென்ற 2 இளைஞர்களும் அந்த பஸ்ûஸ  வழிமறித்து ஓட்டுநருடன் தகராறு செய்தனர். பின்னர், அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டது.

அப்போது அந்த இளைஞர்கள் பஸ்ûஸ பின்தொடர்ந்து சென்று கல்வீசி தாக்கினராம். இதில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

இது குறித்து பாளை. போலீஸில் ஓட்டுநர் புகார் செய்தார். போலீஸார்  வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.