காந்தி ஜயந்தியில் மது விற்பனை: 42 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் காந்தி ஜயந்தி தினத்தன்று


திருநெல்வேலி மாவட்டத்தில் காந்தி ஜயந்தி தினத்தன்று சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்ததாக 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 704 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி அனைத்து மதுபான கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டிருந்தது.
மேலும், மது விற்பனை, மது பாட்டில்களை கடத்துதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இருப்பினும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இது தொடர்பாக திருநெல்வேலி மாநகரத்தில் ஆணையர் கருணாசாகர் உத்தரவின் பேரிலும், மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி உத்தரவின் பேரிலும் போலீஸôர் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்டம் முழுவதும் தடையை மீறி மது பாட்டில்களை விற்பனை செய்ததாக 42 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 704 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாநகர பகுதியில் சந்திப்பு, பாளையங்கோட்டை, மதுவிலக்கு உள்ளிட்ட அனைத்து போலீஸ் நிலையத்திலும் சேர்த்து மது விற்பனை தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 153 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல மாவட்டத்தின் இதர பகுதிகளில் 25 காவல் நிலையங்களில் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 25 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 551 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் திருக்குறுங்குடியில் மட்டும் 308 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல மானூரில் 58 பாட்டில்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...