அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தாமிரவருணி பாசனத்தில் பிசான சாகுபடி பணிகள் தீவிரம்

தாமிரவருணிப் பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. நாற்றுப் பாவுதல், நடுதல் போன்ற பணிகள் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 1:07 am

DIN

தாமிரவருணிப் பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. நாற்றுப் பாவுதல், நடுதல் போன்ற பணிகள் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தாமிரவருணிப் பாசனத்தில் கார், பிசானம் ஆகிய இரு பருவத்தில் நெல் சாகுபடி  செய்யப்படுகிறது. வடகிழக்குப் பருவத்தில் பிசானப் பருவமும், தென்மேற்கு பருவத்தில் கார் பருவமும் சாகுபடி செய்யப்படுவதுண்டு.
முந்தையை தென்மேற்கு, வடகிழக்கு  ஆகிய இரு பருவத்தில் போதிய மழை பெய்யாததால் இப்பாசனத்தில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதை அடுத்து பிசான சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. உழுதல், நாற்று பாவுதல், நடுவு போன்ற பணிகள் தொடங்கியுள்ளன.
இப்பாசனகத்தில் இருபோகம் சாகுபடி செய்த நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
நிகழ் பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து அக். 5 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து இவ்விரு மாவட்டத்தில் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி, கடையம், முக்கூடல், வீரவநல்லூர், சேரன்மகாதேவி,
காருக்குறிச்சி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம், பிரான்சேரி, தருவை மற்றும் பாளையங்கோட்டை வட்டாரத்திலும் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கொடுமுடியாறு, கருப்பாநதி, கடனாநதி, ராமநதி, அடவிநயினார் ஆகிய  அணைகளில் இருந்தும் பிசான சாகுபடிக்கு புதன்கிழமை தண்ணீர் திறக்கப் பட்டதால் முழு அளவில் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.
பாசனத்துக்கு தேவையான யூரியா உள்ளிட்ட உரங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.