மூத்த குடிமக்கள் சங்க மாவட்டச் செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் நல உரிமைச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் பெருமாள்புரத்தில் அண்மையில் நடைபெற்றது.


தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் நல உரிமைச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் பெருமாள்புரத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் சிவ.சோமநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ்.கணபதியப்பன் வரவேற்றார். பொருளாளர் கே.எஸ்.ஆறுமுகம், மாவட்ட கொள்கைபரப்புச் செயலர் எம்.பேச்சியப்பன், மாவட்ட துணைத் லைவர் அகமதுஅம்மாள் ஆகியோர் பேசினர். சங்கரநாராயண பிள்ளை, ஜேம்ஸ் அந்தோனிராஜ், ஆர்.இ.பிள்ளை, பார்வதிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், "மத்திய அரசை பின்பற்றி 7ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது; ரயில் பயணச் சலுகையில் ஆண்களுக்கான வயது வரம்பைக் குறைக்க வேண்டும்; அரசு மருத்துவமனைகளில் முதியோர்களுக்கு தனியாக மருந்து கவுன்ட்டர்கள் அமைக்க வேண்டும்; வண்ணார்பேட்டை பேருந்து நிலையத்தில் கழிப்பறைகள் அமைக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...