கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

கடையநல்லூரில் 13இல் செயல்முறை விழிப்புணர்வுக் காட்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நிழல் இல்லா தினம் குறித்த விழிப்புணர்வு செயல்முறை காட்சி ஏப்.13இல் கடையநல்லூர் பகுதிகளில் நடைபெறுகிறது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:44 am IST

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நிழல் இல்லா தினம் குறித்த விழிப்புணர்வு செயல்முறை காட்சி ஏப்.13இல் கடையநல்லூர் பகுதிகளில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க கடையநல்லூர் பகுதிச் செயலர் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:
நிழல் இல்லாத தினம் என்பது சூரியன் வடக்கு நோக்கிய நகர்வு நாள்களில் ஒருநாளும், தெற்கு நோக்கிய நகர்வு நாள்களில் ஒரு நாளும் பூஜ்ய  நிழல் தினம் வரும். அன்றைய தினம் சூரியன் நேர் உச்சிக்கு வரும்பொழுது பொருள்களின் நிழல் சாயாது. அப்போது பல்வேறு பொருள்களின் நிழலை உற்று நோக்குதல் சிறந்த  கற்றல் அனுபவமாகவும் மகிழ்ச்சியான செயல்பாடாகவும் இருக்கும். 
சாதாரணமாக பொருள்களின் நிழல் சூரியன் உச்சிக்கு செல்லச் செல்ல சிறிதாகிக் கொண்டே வரும். ஆனால் நாம் படிப்பது போல் தினமும் நேர் உச்சிக்கு வருவதில்லை. மகர ரேகைக்கு 23.5 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.5 டிகிரி வடக்காகவும் அமைந்துள்ள நிலப்பகுதிகளில் வருடங்களில் இரண்டு நாள்கள் மட்டுமே சூரியன் சரியான நேர் உச்சிக்கு வரும். மற்ற நாள் களில் வராது. நிகழாண்டில் கன்னியாகுமரியில் ஏப்.10லும், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏப்.13லும் இந்நிகழ்வைக் காணலாம். 
இது தொடர்பான விழிப்புணர்வு செயல்முறை கண்காட்சி கடையநல்லூர் அரசு உறுப்புக் கல்லூரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஏப்.13இல் நடைபெறுகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் சுரேஷ்குமார்  கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கமளிக்கிறார் என கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.