குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அணைகளில் சரியும் நீர்மட்டம்: நெல்லை மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

அணைகளில் நீர் இருப்பு குறைந்து வருவதையடுத்து, திருநெல்வேலி  மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:57 am

DIN

அணைகளில் நீர் இருப்பு குறைந்து வருவதையடுத்து, திருநெல்வேலி  மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 21.85 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லாததால் அணை மூடப்பட்டுள்ளது. சேர்வலாறு, குண்டாறு, வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு, அடவிநயினார் ஆகிய அணைகள் வறண்டுவிட்டன.
மணிமுத்தாறு அணையில் மட்டுமே 77.68 அடி நீர்இருப்பு உள்ளது. அதாவது 2026.84 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இந்த அணையின் நீர் இருப்பைக் கொண்டுதான் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய தண்ணீர் வழங்கப்படுகிறது.
மணிமுத்தாறு அணையில் இருந்து விநாடிக்கு 200 கனஅடி தாமிரவருணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. எனினும் இவ்விரு மாவட்ட குடிநீர்த் திட்டங்களுக்கு போதிய நீர் ஆதாரம் எட்டாத காரணத்தால் குடிநீர் விநியோகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தாமிரவருணி ஆற்றில் சராசரியாக 500 முதல் 800 கனஅடி தண்ணீர் திறந்தால்தான் குடிநீர்த் திட்டங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். தற்போது 200 கனஅடி திறக்கப்படுவதால் முழு அளவில் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலையில் மக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. குறிப்பாக, கிராமப்புறங்களில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மே மாதத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கோரிக்கை: பாபநாசம் அணை மூடப்பட்டதால் விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையக்கருங்குளம் பகுதியில் குடிநீர் விநியோகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கருணை ஆறு, ராமநதி வறண்டதால் அம்பாசமுத்திரம், கடையம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. எனவே, கிராமப்புற மக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
நீர்மட்டம்: சேர்வலாறு அணை 19.68 அடி, கடனாநதி அணை 56.60 அடி, ராமநதி அணை 51 அடி, கருப்பாநதி அணை 46.57 அடி, குண்டாறு அணை 20.13 அடி, அடவிநயினார் அணை 50 அடி, வடக்குப் பச்சையாறு அணை 5 அடி, கொடுமுடியாறு அணை 6 அடி.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 6.11 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 55 கனஅடி, ராமநதி, அடவிநயினார் அணைகளுக்கு தலா 5 கனஅடி நீர்வரத்து இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.