கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இஸ்கான் கோயிலில் நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் நரசிம்ம அவதார நாளையொட்டி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:57 am

DIN

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் நரசிம்ம அவதார நாளையொட்டி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இக் கோயிலில் ஆண்டுதோறும் நரசிம்மர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி லட்சுமி நரசிம்மருக்கு ஒன்பது கலசங்களில் விசேஷ தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு பூஜிக்கப்பட்டன. பால், பழம், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், பழரசங்கள் போன்ற வகையான அபிஷேகங்கள் வலம்புரி சங்குகளால் நடைபெற்றன. பல வண்ண பூக்களால் புஷ்ப அபிஷேகமும், பூர்ண கும்ப ஆரத்தியுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கிருஷ்ண பலராமரையும், லட்சுமி நரசிம்மரையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு கிருஷ்ண பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.