மின்வாரிய தொமுச ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலியில் மின்வாரிய திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலியில் மின்வாரிய திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் திருநெல்வேலி கோட்ட கிளைத் தலைவர் எஸ். மைக்கேல் பிரான்சிஸ் தலைமை வகித்தார். வட்டாரச் செயலர் எஸ். விஜயகுமார், ஆலோசகர்கள் டி. ராஜாராம் பாரதி, வி.மு. முருகன், குமார. சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திமுக தொழிலாளர் அணியின் மாநில பொதுச்செயலர் ரத்தினசபாபதி பங்கேற்றுப் பேசினார்.
திருநெல்வேலி கோட்ட கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக எஸ். மைக்கேல் பிரான்சிஸ், செயலராக சு. நாச்சினார்கினியன், பொருளாளராக என். மகராஜன், துணைத் தலைவர்களாக அருணன், ராஜ், இசக்கிமுத்து, துணைச் செயலர்களாக சத்தியராஜ், ராமசாமி, சத்தியகுமார், பிரசார செயலர்களாக உதயகுமார், பெத்தேல்ராஜ், ஆரோக்கிய வளன், எம். பரமசிவன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...