8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஆலங்குளத்தில் ரூ.50 ஆயிரம் போலி பீடி பண்டல்கள் பறிமுதல்

ஆலங்குளம் அருகே ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள போலி பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

ஆலங்குளம் அருகே ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள போலி பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆலங்குளம் பகுதியில் போலி பீடி தயாரித்து விற்கப்படுவதாக திருநெல்வேலி தனியார் பீடி நிறுவன மேலாளர் பக்கிர் முகம்மது ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  
இந்நிலையில் ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையில் போலி பீடி தயார் செய்யப்படுவதாக போலீஸாருக்கு வந்த தகவலை அடுத்து போலீஸார் குருவன்கோட்டை சென்றனர். அங்கு பாபநாசம் மகன் பாஸ்கரன் என்பவர் வீட்டில் பிரபல நிறுவனம் பெயரில் போலி பீடிகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 
இதையடுத்து சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள 30 பீடி பண்டல்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், பாஸ்கரனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.