8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பாளை.யில் இரு பெண்களிடம் சங்கிலி பறிப்பு

பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இரு பெண்களிடம் சங்கிலியை பறித்துச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இரு பெண்களிடம் சங்கிலியை பறித்துச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரைச் சேர்ந்த பாஸ்கர் மனைவி உலகம்மாள் (40). இவர் தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சமாதானபுரம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள், உலகம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர். அப்போது சங்கிலி அறுந்ததால்,  பாதி சங்கிலியோடு அங்கிருந்து தப்பிய மர்ம நபர்கள்,  பெல் பள்ளியில் இருந்து குழந்தையை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற கேடிசி நகரைச் சேர்ந்த ஜோஸ்பின் பிரின்ஸ் மனைவி விமலா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பினர். 
இதையடுத்து விமலா அவர்களை விரட்டிச் சென்றுள்ளார். அப்போது சட்டக் கல்லூரி அருகே மர்ம நபர்களுள் ஒருவன் தவறி கீழே விழுந்துள்ளான். எனினும் யாரிடமும் சிக்காத அவன், வேகமாக எழுந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பினான். 
இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.