/

இலவச வீடு கட்டும் திட்டம்: அம்பையில் 199 பேருக்கு ஆணை

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் இலவச வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 199 பயனாளிகளுக்கு பணி ஆணை

Updated On :30 ஜனவரி 2024, 11:31 pm IST

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் இலவச வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 199 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி அம்பாசமுத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். முருகையாபாண்டியன் கலந்துகொண்டு, அந்நகராட்சிக்குள்பட்ட பயனாளிகள் 199 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கி பேசியது:  இலவச வீடுகட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்ட மத்திய- மாநில அரசு சார்பில் மானியமாக ரூ. 2.10 லட்சம் வழங்கப்படும். இதில், 300 சதுர அடிக்குக் குறையாமல் வீடு கட்டவேண்டும். இந்தத் தொகுதியில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிப் பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் மூலம் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால்,  அனைவருக்கும் வீடு கிடைப்பதோடு, சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நேர்முகமாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன என்றார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியப் பொறியாளர் மாடசாமி, மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை இணைச் செயலர் வெங்கட்ராமன், நகரச் செயலர் அறிவழகன், ஒன்றியச் செயலர் செல்வராஜ், மணிமுத்தாறு ராமையா, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் துர்க்கை துரை, சிவந்திபுரம் ப்ராங்க்ளின், துர்க்கை பாபு மற்றும் நிர்வாகிகள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.