உவரி அருகே கார் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிழந்தார்.
உவரி ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள இடிந்தகரை கிராமத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 9 பேர் வந்த கார் உவரி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 5 பேர் பலத்த காயத்துடன் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், அபிஷேக், அஜித், செல்வம் ஆகிய 3 பேர் பாளை. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அபிஷேக் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். இது குறித்து உவரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.