கார்த்தி சிதம்பரம் கைது: இளைஞர் காங்கிரஸ் கண்டனம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என இளைஞர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.


முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என இளைஞர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ போலீஸார் கைது செய்திருப்பதில் உள்நோக்கமும், பழிவாங்கும் நோக்கமும் உள்ளது. விசாரணைக்கு பல முறை நேரில் ஆஜராகியும் கூட விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என காரணம் தெரிவித்து, அவரது முன் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது கைது செய்திருப்பது மத்திய அரசின் பழிவாங்கும் செயலாகும். இது கண்டனத்துக்குரியது. நாட்டில் நிகழும் பல்வேறு பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் வகையில் காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் மிரட்டும் மற்றொரு முயற்சி என திருநெல்வேலி மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உ. ராஜீவ்காந்தி அறிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...