திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ஞானஆனந்த் தொடங்கி வைத்தார். கலைக்குழுவினர் பாடல்கள், நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ரயில்கள் மற்றும் நிலையங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், பட்டாசுகளை கொண்டு செல்வது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164 இன் கீழ் குற்றமாகும். இதற்கு குறைந்தது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, ரயில் பயணிகள் அரசின் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







