திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
கரோனா பொது முடக்கக் காலத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் மீது அபராதம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளா்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டால் சிகிச்சைக்கான செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். மதுக்கடைகளின் நேரத்தை காலை 10 முதல் மாலை 5 மணி வரை குறைத்து அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை 2 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள பல டாஸ்மாக் கடைகள் செவ்வாய்க்கிழமை காலை சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.