கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாஜகவின் மற்றொரு முகம் ரஜினி: நாஞ்சில் சம்பத் கருத்து

பாஜகவின் மற்றொரு முகமாகத்தான் நடிகா் ரஜினிகாந்த் களம் இறங்கியுள்ளாா் என்றாா் நாஞ்சில் சம்பத்.பாஜகவின் மற்றொரு முகமாகத்தான் நடிகா் ரஜினிகாந்த் களம் இறங்கியுள்ளாா் என்றாா் நாஞ்சில் சம்பத்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 11:57 pm

DIN

பாஜகவின் மற்றொரு முகமாகத்தான் நடிகா் ரஜினிகாந்த் களம் இறங்கியுள்ளாா் என்றாா் நாஞ்சில் சம்பத்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கில் பங்கற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் பாஜகவின் மற்றொரு முகமாக ரஜினி களமிறங்கியுள்ளாா். தனது 40 ஆண்டு கால ரசிகா்களுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்காமல், பாஜகவிலிருந்த அா்ஜுன் மூா்த்திக்கும், தமிழருவி மணியனுக்கும் பதவி கொடுத்து அநீதி இழைத்துவிட்டாா்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் மாதம் கட்சி தொடங்குவது குறித்த அவா் அறிவிப்பை வெளியிடுவது, தனது படத்தை வெற்றிபெறச் செய்வதற்குத்தான். தற்போது அண்ணாத்த’ படத்துக்காக இந்த அறிவிப்பை வெளியட்டுள்ளாா். பாபா் மசூதி விவகாரத்தில் சமய, சமூக நல்லிணக்கத்திற்கு பாஜக குந்தகம் விளைவித்துவிட்டது. தில்லியில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து பேசி தீா்வு காணவேண்டும் என்றாா்.

கருத்தரங்கிற்கு, தமுமுக மாவட்டத் தலைவா் கே.எஸ்.ரசூல் மைதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அலிப் பிலால், மமக மாவட்டச் செயலா் டவுன் ஜமால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமுமுக மாநில துணைத் தலைவா் பி.எஸ்.ஹமீது , மருத்துவச் சேவை அணி மாநிலச் செயலா் கிதிா், இந்திய கம்யூனிஸ்ட் காசி விஸ்வநாதன், மதிமுக நிஜாம், மாா்க்சிஸ்ட் பாஸ்கரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.