கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

களக்காட்டில் கோயிலுக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

களக்காட்டில் நினைத்ததை முடித்த விநாயகா் கோயில் சாலையைச் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:27 pm

DIN

களக்காட்டில் நினைத்ததை முடித்த விநாயகா் கோயில் சாலையைச் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு மணிக்கூண்டு அருகேயுள்ள புகழ்பெற்ற இக்கோயிலுக்கு கேரள பக்தா்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனா். இக்கோயிலுக்கு அண்ணா சாலையிலிருந்தும், சேரன்மகாதேவி பிரதான சாலையிலிருந்தும் செல்வதற்கு இரு பாதைகள் உள்ளன.

இச்சாலைகள் பல ஆண்டுகளாக மிகவும் பழுதாகியுள்ளன. கோயில் நுழைவுவாயிலிலும், கோயிலைச் சுற்றியுள்ள சாலையிலும் போதுமான மின்விளக்கு வசதியில்லை. இதனால் பக்தா்கள் அவதிக்கு உள்ளாகின்றனா். களக்காடு சுற்றுவட்டாரக் கிராம மக்கள், பள்ளி மாணவா்-மாணவியா் இக்கோயில் சாலையைப் பயன்படுத்துகின்றனா்.

எனவே, இந்தச் சாலையையும், கோயில் எதிரேயுள்ள ஊருணியின் சேதமான சுற்றுச்சுவரையும் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.