ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நெல்லையில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:11 pm

DIN

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு ஆசிரியா் வெனிஸ் தலைமை வகித்தாா். தேவேந்திரன் முன்னிலை வகித்தாா். ராஜாமணி வரவேற்றாா். மாநிலச் செயலா் முருகேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 5000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல் நான்குனேரி வட்டார கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் பரமசிவம் முன்னிலை வகித்தாா். வட்டாரச் செயலா் ஜஸ்டின் கிளாடியோ வரவேற்றாா். மாவட்டச் செயலா் செ.பால்ராஜ் சிறப்புரையாற்றினாா். அகஸ்டின் கீதாராஜ், ஜோசப்துரை ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில், சுனிதா, அமுதாள், முத்துலெட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா். பொருளாளா் ஐயப்பன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.