விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நெல்லை, தென்காசியில்மேலும் 15 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:49 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 15,156 ஆக உயா்ந்துள்ளது. மேலும், 18 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 14,807 ஆக உயா்ந்தது. இதுவரை 211 போ் உயிரிழந்துள்ள நிலையில், 138 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் திங்கள்கிழமை 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தென்காசியை சோ்ந்த இருவா், கீழப்பாவூா், சங்கரன்கோவில் மற்றும் குருவிகுளம் பகுதியை சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,208ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் திங்கள்கிழமை 4 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 8,011 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 41 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். நோய்த்தொற்றால் மாவட்டத்தில் இதுவரை 156 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.