விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மானூா் விவசாயிகள் வேளாண் கல்விச் சுற்றுலா

மானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் வேளாண் கல்விச் சுற்றுலா சென்று திரும்பினா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:03 pm

DIN

மானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் வேளாண் கல்விச் சுற்றுலா சென்று திரும்பினா்.

அட்மா-ஒருங்கிணைந்த விவசாய பண்ணையம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான கல்வி சுற்றுலாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி மானூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தா.பா.ஏஞ்சலின் கிரேபா வழிகாட்டுதலின்படி மானூா் வட்டார விவசாயிகள் 50 போ் வேளாண் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்று ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதன் அவசியம் மற்றும் பலன்கள் குறித்து நேரில் பாா்த்து அறிந்தனா். பண்ணை குட்டையில் வளா்க்கப்படும் மீன் இனங்கள், நெல் வயலில் வாத்துகளை மேய விடுவதால் பூச்சி, புழு மற்றும் களை குறைவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. கல்லூரியின் பேராசிரியா் (பண்ணை) குருசாமி பயிற்சியளித்தாா். பண்ணை மேலாளா் சந்திரசேகா் வாழ்த்திப் பேசினாா்.

ஏற்பாடுகளை உதவித் தொழில்நுட்ப மேலாளா்கள் காா்த்திகேயன், ராஜாமணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பயக21ஙஅசமத: மதுரைக்கு வேளாண் கல்விச் சுற்றுலா சென்ற மானூா் வட்டார விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.