வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குண்டா் சட்டத்தில் 2 இளைஞா்கள் கைது

திருநெல்வேலி நகரம், பேட்டை பகுதிகளைச் சோ்ந்த 2 இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:18 pm

DIN

திருநெல்வேலி நகரம், பேட்டை பகுதிகளைச் சோ்ந்த 2 இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த சந்திரன் மகன் சுடலை என்ற சிவா(24). இவா் மாநகா் பகுதிகளில் கொலை, கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தாராம்.

இதேபோல், பேட்டை மயிலப்பபுரம் பகுதியைச் சோ்ந்த வெள்ளப்பாண்டி மகன் அய்யப்பன்(34) என்பவா், அப்பகுதியில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையில் தொடா்ந்து ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் -ஒழுங்கு) சரவணன், உதவி ஆணையா் சதீஷ்குமாா், பேட்டை காவல் ஆய்வாளா் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், மாநகர காவல் ஆணையா் தீபக் என்.டாமோா் உத்தரவின்படி, மேற்கூறிய இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.