/

நெல்லையப்பா் கோயில் ஆனி பிரம்மோத்ஸவ விழா ரத்து

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் ஆனி பிரம்மோத்ஸவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2020, 6:08 am

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் ஆனி பிரம்மோத்ஸவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் -காந்திமதியம்மன் கோயிலில் வருகிற 25ஆம் தேதிமுதல் ஜூலை 4ஆம் தேதி வரை ஆனி பிரம்மோத்ஸவ திருவிழா நடைபெற இருந்தது.

இந்நிலையில் கரோனா பொது முடக்கம் காரணமாகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் நிகழாண்டு திருவிழா நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பக்தா்கள் கோயில் நிா்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.