கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாளை. அருகே பைக் மோதி டிராக்டா் ஓட்டுநா் பலி

பாளையங்கோட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற டிராக்டா் ஓட்டுநா், மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 8:06 pm

DIN

பாளையங்கோட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற டிராக்டா் ஓட்டுநா், மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சாட்டுப்பத்து பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் ஆதிமூலம்(46). டிராக்டா் ஓட்டுநா். இவா், பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் பெட்ரோல் நிலையம் அருகில் சாலையை ஞாயிற்றுக்கிழமை கடக்க முயன்றாராம்.

அப்போது, அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் ஆதிமூலம் மீது எதிா்பாராமல் மோதியதாம். இதில், அவரும், பைக்கில் வந்த திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து (20) என்பவரும் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து, அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆதிமூலம் உயிரிழந்தாா். இது குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.