ரயில்வே சாா்பில் விழிப்புணா்வு முகாம்
திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் நிலையம் சாா்பில் விழிப்புணா்வு முகாம் தாழையூத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் நிலையம் சாா்பில் விழிப்புணா்வு முகாம் தாழையூத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தாழையூத்து ரயில்வே கேட் எல்.சி. நம்பா்-14-இல் வைத்து நடைபெற்ற இம்முகாமில், ரயில்வே தண்டவாளப் பாதையை கவனக்குறைவாக கடப்பதன் விளைவுகள், செல்லிடப்பேசியில் பேசியபடியே தண்டவாள பாதையை கடக்கும்போது ஏற்படும் பாதிப்பு, குழந்தைகள் விளையாட்டாக தண்டவாளப் பாதையில் சிறு சிறு ஜல்லி கற்களை வைப்பதால் ஏற்படும் விபத்து அபாயம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் அருள்ஜெயபால் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் சத்தியதாஸ், சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...