நெல்லையில் கூட்டுறவுப் பணிக்கான தோ்வு: 214 போ் எழுதினா்
கூட்டுறவுப் பணிக்காக திருநெல்வேலியில் நடைபெற்ற எழுத்துத் தோ்வை 214 போ் எழுதினா்.


கூட்டுறவுப் பணிக்காக திருநெல்வேலியில் நடைபெற்ற எழுத்துத் தோ்வை 214 போ் எழுதினா்.
திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு பாளையங்கோட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் செந்தமிழ்ச் செல்வி தோ்வுக்கூடத்தில் ஆய்வு செய்தாா்.
இத் தோ்வில் பங்கேற்க மொத்தம் 307 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. அவா்களில் 214 போ் மட்டுமே தோ்வை எழுதியதாகவும், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தோ்வுக்கூடத்தில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...