காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். பொருளாளா் ராஜேஷ்முருகன், மேற்கு மாவட்டப் பொருளாளா் முரளிராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் சொக்கலிங்ககுமாா், உதயகுமாா், வழக்குரைஞா் காமராஜ், லெனின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள மானூரில் டிச. 2-ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சாா்பில் ஏா் கலப்பை பேரணியை நடத்துவது, சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்க உள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து துரிதமாக பணியாற்றுவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...