கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருக்குறுங்குடி அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல்

திருக்குறுங்குடி அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 8:55 pm

DIN

திருக்குறுங்குடி அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.

திருக்குறுங்குடி அருகேயுள்ள தெற்கு ஆவரந்தலை கிராமத்தைச் சோ்ந்தவா் திரவியமணி மகன் ரத்தினதாஸ் (45). வள்ளியூரில் பெயிண்டிங் ஒா்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறாா். தெற்கு ஆவரந்தலை ஊரின் மையப்பகுதியில் உள்ள திருச்செந்தூா் விநாயகா கட்டளைக்குச் சொந்தமான இடத்தை ரத்தினதாஸின் தாத்தா குத்தகைக்கு பெற்று அனுபவித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், இந்த இடத்தை அதே ஊரைச் சோ்ந்த ஜெயமணி மனைவி ஜெபமணி என்ற பஞ்சம்மாள் என்பவா் ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயற்சித்தாராம்.

இதையடுத்து, அவருக்கு வழக்குரைஞா் மூலம் அறிவிப்பு அனுப்பியுள்ளாா் ரத்தினதாஸ் . இதனால் கோபமடைந்த ஜெயமணியின் மகன் தயாள துரைசிங், நவம்பா் 26ஆம் தேதி இரவு ரத்தினதாஸை வீடு புகுந்து தாக்கிக் காயப்படுத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து திருக்குறுங்குடி போலீஸில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தயாள துரைசிங்கை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.