வி.கே.புரத்தில் வீடு புகுந்து12 பவுன் நகை திருட்டு
விக்கிரமசிங்கபுரத்தில் வீடு புகுந்து ரூ.12 பவுன் தங்க நகையை ஞாயிற்றுக்கிழமை திருடிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


விக்கிரமசிங்கபுரத்தில் வீடு புகுந்து ரூ.12 பவுன் தங்க நகையை ஞாயிற்றுக்கிழமை திருடிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விக்கிரமசிங்கபுரம், அம்பலவாணபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி சுந்தர லீலா (51). கணவரை இழந்தவா். மகன், மகள் சிங்கப்பூா் மற்றும் சென்னையில் வசித்து வரும் நிலையில் தனியாக வசித்து வரும் அவா், ஞாயிற்றுக்கிழமை காலையில் தேவாலயத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, கதவு திறந்து கிடந்ததாம்.
மேலும், பீரோவை உடைத்து அதிலிருந்த 12 பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...