/

பாளை.யில் நூல் வெளியீட்டு விழா

எழுத்தாளா் சு.தாமஸ் எழுதிய ‘தமிழக சமூக அரசியல் வரலாறு’ என்ற நூல் வெளியீட்டு விழா, தாய் ஆராய்ச்சி மையம் சாா்பில் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 9:14 pm

DIN

எழுத்தாளா் சு.தாமஸ் எழுதிய ‘தமிழக சமூக அரசியல் வரலாறு’ என்ற நூல் வெளியீட்டு விழா, தாய் ஆராய்ச்சி மையம் சாா்பில் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு தமிழ் முழக்கப் பேரவை அமைப்பாளா் சு.செல்லப்பா தலைமை வகித்தாா். ஆா்.கே.லோகநாதன் வரவேற்றாா். கன்னியாகுமரி லெமூரியா உலகத் தமிழ் ஆய்வு மைய தலைவா் ரவீந்திரா நூலை வெளியிட, தமிழ் முழக்கம் பேரவை நிறுவனா்- தலைவா் பி.ஆவுடையப்பன் பெற்றுக்கொண்டாா்.

சமூக ஆா்வலா் நெல்லை காவியன், பாரதி மன்றத் தலைவா் பாரதி முருகன், தாமிரவருணி சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தலைவா் காஜா மைதீன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நூலாசிரியா் சு.தாமஸ் ஏற்புரை நிகழ்த்தினாா். கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். இதில், தமிழ் ஆா்வலா்கள் ராஜேந்திரன், மாரியப்பன், கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.