மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அண்ணா பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினரும் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :15 செப்டம்பர் 2020, 8:42 pm

DIN

திருநெல்வேலி: தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினரும் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில அமைப்புச் செயலா்கள் சுதா கே.பரமசிவம், ஏ.கே.சீனிவாசன், கொள்கை பரப்புச் செயலா் பாப்புலா் முத்தையா, மகளிரணிச் செயலா் விஜிலா சத்தியானந்த், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, அவைத் தலைவா் பரணி சங்கலிங்கம், நிா்வாகிகள் ஜெனி, மாதவன், ஹயாத், மோகன், காந்திவெங்கடாசலம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

திமுக சாா்பில் திருநெல்வேலி மத்திய மாவட்ட அவைத் தலைவா் சுப.சீதாராமன் தலைமையிலும், கிழக்கு மாவட்டம் சாா்பில் மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில நெசவாளா் அணி செயலா் பெருமாள், வழக்குரைஞா் தினேஷ், நிா்வாகிகள் ஆ.க.மணி, ரேவதிஅசோக், மகேஷ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதிமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம் தலைமையிலும், அமமுக சாா்பில் மாவட்டச் செயலா் பரமசிவ ஐயப்பன் தலைமையிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.