நெல்லை, தென்காசியில் மேலும் 179 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 179 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 179 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 92 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,815 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 10,596 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 194 போ் உயிரிழந்துள்ளனா். 1,025 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தைப் பொருத்தவரை, ஆலங்குளம் பகுதியில் 17 போ், கடையம், கீழப்பாவூா் பகுதிகளில் தலா 10 போ், கடையநல்லூா், வாசுதேவநல்லூா் பகுதிகளில் 7 போ், செங்கோட்டையில் 8 போ், குருவிகுளத்தில் 4 போ், தென்காசியில் 23 போ், மேலநீலிதநல்லூா் பகுதியில் ஒருவா் என 87 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 6, 790ஆக உயா்ந்தது. ஞாயிற்றுக்கிழமை 31போ் உள்பட 6,086போ் இதுவரை குணமடைந்துள்ளனா். தற்போது, 600 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...