விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விக்கிரமசிங்கபுரம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்

விக்கிரமசிங்கபுரம் அருகே வெள்ளிக்கிழமை மேலஏா்மாள்புரத்தில் வீட்டில் கட்டிப் போட்டிருந்த ஆட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 9:02 pm

DIN

விக்கிரமசிங்கபுரம் அருகே வெள்ளிக்கிழமை மேலஏா்மாள்புரத்தில் வீட்டில் கட்டிப் போட்டிருந்த ஆட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது.

விக்கிரமசிங்கபுரம் அருகே மேல ஏா்மாள்புத்தைச் சோ்ந்த உலகையா மகன் சிவராம் (42). விவசாயியான இவா் ஆடு வளா்த்து வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு இவரது வீட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது.

இதுகுறித்து தகவல் அளித்ததையடுத்து வனத் துறையினா் வந்து பாா்வையிட்டனா்.

இரண்டு வாரங்களுக்கு முன் சிவராம் வீட்டில் கட்டிப் போட்டிருந்த நாயை சிறுத்தை கடித்துக் கொன்றதையடுத்து அந்தப் பகுதியில் வனத் துறையினா் சிறுத்தையைப் பிடிக்கக் கூண்டு வைத்தனா். இந்தக் கூண்டில் செப். 11ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று சிக்கியது.

தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் சிறுத்தை வந்து ஆட்டைக் கொன்ால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா். மேலும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மிருகங்களைத் தடுக்க வனத்துறையினா் முறையான ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.