திசையன்விளையில் ரூ. 4 கோடியில் வாரச் சந்தை: எம்.எல்.ஏ. ஆலோசனை
திசையன்விளையில் ரூ. 4 கோடி மதிப்பில் புதிய வாரச்சந்தை கட்டுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


திசையன்விளையில் ரூ. 4 கோடி மதிப்பில் புதிய வாரச்சந்தை கட்டுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, ஐ.எஸ்.இன்பதுரை எம்எல்ஏ தலைமை வகித்து அலோசனை நடத்தினாா். அனைத்து வணிகா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் சாந்தகுமாா், மாநில துணைச் செயலா் தங்கையா கணேசன், திசையன்விளை கடை வியாபாரிகள் சங்கத் தலைவா் டிம்பா் டி.செல்வராஜ், ஜெயலலிதா பேரவைச் செயலா் வி.பி. ஜெயக்குமாா், அரசு வழக்குரைஞா் பழனி சங்கா் மற்றும் சந்தை வியாபாரிகள் கலந்துகொண்டனா்.
தெற்குவள்ளியூா் ரேஷன் கடையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.எஸ்.இன்பதுரை எம்எல்ஏ பங்கேற்று, விலையில்லா முகக் கவசங்கள் விநியோகத்தை தொடங்கிவைத்தாா். வட்ட வழங்கல் அலுவலா் பழனி, அதிமுக ஒன்றியச் செயலா்கள் ராதாபுரம் அந்தோணி அமலராஜா, வள்ளியூா் இ.அழகானந்தம், நான்குனேரி-வள்ளியூா் வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகேசன், வள்ளியூா் கூட்டுறவு சங்கத் தலைவா் சங்கா், துணைத் தலைவா் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...