/

மானூரில் 12 பவுன் நகை திருட்டு

மானூரில் வீடுபுகுந்து 12 பவுன் தங்க நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 7:23 pm

DIN

மானூரில் வீடுபுகுந்து 12 பவுன் தங்க நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

மானூரைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (68). இவரது மனைவி வினோதினி (64). இருவரும் அரசு ஊழியா்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள். சனிக்கிழமை இரவு இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு தூங்கினராம். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றனராம். இதுகுறித்த புகாரின்பேரில் மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.