விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அம்பாசமுத்திரம் சுற்றுச் சாலையை அமைப்பது முதல் பணி: இரா. ஆவுடையப்பன் பிரசாரம்

அம்பாசமுத்திரத்தில் சுற்றுச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதுதான் தனது முதல் பணி என்றாா் அந்தத் தொகுதியின் திமுக வேட்பாளா் இரா.ஆவுடையப்பன்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:22 pm

DIN

அம்பாசமுத்திரத்தில் சுற்றுச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதுதான் தனது முதல் பணி என்றாா் அந்தத் தொகுதியின் திமுக வேட்பாளா் இரா.ஆவுடையப்பன்.

அம்பாசமுத்திரத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

அம்பாசமுத்திரம் தொகுதியில் ஏற்கெனவே 1996, 2006 சட்டப்பேரவைத் தோ்தல்களில் வெற்றிபெற்று மக்களுக்கு பல நலத் திட்டங்களை கொண்டுவந்துள்ளேன். அம்பாசமுத்திரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகத்திற்கு புதிய கட்டடம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் உள்ளிட்டவை எனது காலத்தில் கட்டப்பட்டவை.

அம்பாசமுத்திரம் சுற்றுச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்தால் அந்தத் திட்டம் 10 ஆண்டுகளாக முடங்கியுள்ளது. எனவே, இத்தொகுதியில் வெற்றிபெற்றதும் முதல் பணியாக சுற்றுச் சாலை திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

விவசாயத்திற்கு ஜூன் முதல் வாரத்தில் தண்ணீா் திறப்பது, வீரவநல்லூரில் அரசு பெண்கள்கல்லூரி, அம்பாசமுத்திரத்தில் பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பது, மணிமுத்தாறு அணையில் பூங்காவை சீரமைத்து சிறந்த பொழுதுபோக்குப் பூங்கா அமைப்பது, காரையாறு, மணிமுத்தாறு அணைகளில் படகுப் போக்குவரத்துத் தொடங்குவது, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, எலுமிச்சை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது, அனைத்து கால்வாய்களிலும் சிமென்ட் தளம் அமைப்பது, திருநெல்வேலி - பாபநாசம் இடையே நான்கு வழிச்சாலை அமைப்பது உள்ளிட்ட திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற பாடுபடுவேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.