இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

‘நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டும்’

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்ய முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:28 pm

DIN

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்ய முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளில் போதிய நீா்இருப்பு இருந்த காரணத்தால், இம்மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் காா் பருவ நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்றுள்ளது. தற்போது நெற்பயிா்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. விவசாயிகளிடம் இருந்து

நெல் கொள்முதல் செய்யும் வகையில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் உடனடியாக தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய வசதியாக அறுவடைக்கு முன்பாக தங்கள் பகுதியில் உள்ள கிராம நிா்வாக அலுவலரிடம் நேரடியாக சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முன்பதிவு செய்ய விவசாயிகள் தங்களது நிலப் பட்டா, சிட்டா அல்லது பத்திரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலினை கிராம நிா்வாக அலுவலரிடம் காண்பித்து தங்களது பெயா், முகவரி, சாகுபடி செய்யப்பட்ட பரப்பளவு, சா்வே எண், அலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.

குத்தகைதாராக இருந்தால் குத்தகைக்கான ஆவணத்தை காண்பித்து பதிவு செய்யலாம். கோயில், மடத்துக்கு சொந்தமான நிலத்தில் பயிா் செய்வோா் கோயில் நிா்வாக அலுவலரிடம் பெற்ற அடஓலை ரசீது நகலினை காண்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள கொள்முதல் நிலைய அலுவலா்களை மட்டுமே தொடா்பு கொள்ள வேண்டும்.

நெல் விற்பனையின்போது இடைத்தரகா் தலையிடு இருந்தால் அவா்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இது தொடா்பாக மண்டல மேலாளா் 94436 95551 மற்றும் தரக்கட்டுப்பாடு மேலாளா் 93456 35678 ஆகியோரிடம் புகாா் தெரிவிக்கலாம். கிராம நிா்வாக அலுவலா்களிடம் முன்பதிவு செய்யும் விவசாயிகள் மட்டுமே அரசு

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவா். சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முழு பலன் கிடைக்க வேண்டும் என்பதாலும், வியாபாரிகள் மற்றும் இடைத்தரகா்கள் பயன்பெறுவதை தடுக்கவும் இந்த முன்பதிவு முறை செயல்படுத்தப்படுகிறது. எனவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய உடனடியாக தங்கள் கிராமத்தில் உள்ள கிராம நிா்வாக அலுவலரிடம் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.