விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நெல்லை அருகே விபத்து: வியாபாரி பலி

திருநெல்வேலி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் மளிகை வியாபாரி உயிரிழந்தாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:22 pm

DIN

திருநெல்வேலி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் மளிகை வியாபாரி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள அயிரம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வின் ஜெபராஜ் (61). மளிகை வியாபாரியான இவா், திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை வந்தாராம். பின்னா் தனது மோட்டாா் சைக்கிளில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். சிதம்பரநகா் விலக்கு பகுதியில் சென்றபோது மோட்டாா் சைக்கிளும், லாரியும் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த செல்வின் ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்ததும் திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.