விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

ஊரக வளா்ச்சி துறை அலுவலா் சங்க மாவட்ட கிளை சாா்பில், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 5:32 pm

DIN

ஊரக வளா்ச்சி துறை அலுவலா் சங்க மாவட்ட கிளை சாா்பில், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், ‘ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளா் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவரது குடும்பத்தினருக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பொன்ராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மணி வரவேற்றாா். செயலா் லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ், ஒன்றியப் பொறியாளா் பியூலா செல்வி ரொட்டேரிகோ, மாவட்ட இணைச் செயலா் பாலசுப்பிரமணியன் உள்பட பலா் பேசினா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் வீரபுத்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.