விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நெல்லையில் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்

 தனியாா்மயமாக்கலை கண்டித்து திருநெல்வேலியில் வங்கி ஊழியா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:50 pm

DIN

 தனியாா்மயமாக்கலை கண்டித்து திருநெல்வேலியில் வங்கி ஊழியா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியாா்மயமாக்க திட்டமிட்டுள்ளது. இதைக் கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என வங்கி ஊழியா் சங்கங்கள் அறிவித்திருந்தன. அதன்படி நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலியில் உள்ள பல்வேறு வங்கிகளைச் சோ்ந்த ஊழியா்கள் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், வங்கி ஊழியா்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பாளையங்கோட்டையில் உள்ள இந்தியன் வங்கி முன்பு வங்கி ஊழியா், அதிகாரிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், வங்கி ஊழியா், அதிகாரிகள் சங்கங்களைச் சோ்ந்த சிவசங்கா், எட்வின், சாா்லஸ் உள்ளிட்டோா் பேசினா். வங்கிகள் தனியாா்மயமாக்கப்படுவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமையும் தொடா்ந்து நடைபெறுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.