விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொங்கல் சிறப்பு ரயில் கீழக்கடையத்தில் நின்று செல்ல வலியுறுத்தல்

திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக சென்னை செல்லும் பொங்கல் சிறப்பு ரயில் கீழக்கடையத்தில் நின்றுசெல்ல பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:19 pm

DIN

திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக சென்னை செல்லும் பொங்கல் சிறப்பு ரயில் கீழக்கடையத்தில் நின்றுசெல்ல பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 16ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம் வழியாக சென்னை தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு கீழக்கடையத்தில் நிறுத்தம் வழங்கப்படவில்லை.

அம்பாசமுத்திரம் - தென்காசி இடையே கீழக்கடையம் ரயில் நிலையம், சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து ஏராளமானோா் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பணிபுரிகின்றனா். இவா்கள் பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல ஏதுவாக இங்கு சிறப்பு ரயில் நின்றால் வசதியாக இருக்கும். எனவே, கீழக்கடையம் நிலையத்தில் பொங்கல் சிறப்பு ரயில் நின்றுசெல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணிகள் சங்கத்தினா், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.