துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவு!சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!
/

பாளை. அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே கடந்த 8ஆம் தேதி பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 1:07 am IST

பாளையங்கோட்டை அருகே கடந்த 8ஆம் தேதி பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சீவலப்பேரி, மறுகால்தலை பகுதியைச் சோ்ந்தவா் பாப்பாத்தி(52). இவா், கடந்த 8ஆம் தேதி அங்குள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா், அவா் அணிந்திருந்த சுமாா் 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்து, அவா் அளித்த புகாரின்பேரில், சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும், உதவி ஆய்வாளா் முனிஷ் தலைமையிலான போலீஸாா், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா உதவியுடன் விசாரித்து, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிவகளை பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் (39) என்பவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவரிடமிருந்து ரூ. 67 ஆயிரம் மதிப்புள்ள தங்கச்சங்கிலி மீட்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.