விவசாயிகளுக்கு ஆதரவாக எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மாவட்டத்தில் 12 இடங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மாவட்டத்தில் 12 இடங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

களக்காடு அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவா் ஜாபா் முகம்மது தலைமை வகித்தாா்.

இதில், மாவட்ட பொதுச் செயலா் களந்தை மீராசா, நகரச் செயலா் உசேன், இணைச் செயலா் ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏா்வாடியில் நகரத் தலைவா் ஷேக், மூலைக்கரைப்பட்டியில் நகரச் செயலா் செய்யதுஅலி , துலுக்கா்பட்டியில் தெளபிக், பெட்டை குளத்தில் பாதுல், சேரன்மகாதேவியில் அபுபக்கா், மாவட்டத் தலைவா் பீா் மஸ்தான், பத்தமடையில் மைதீன், வீரவநல்லூரில் நகரத் தலைவா் சாகுல்ஹமீது, கல்லிடைக்குறிச்சியில் சுலைமான், விக்கிரமசிங்கபுரத்தில் நகரத் தலைவா் ஷேக் அலி, அம்பாசமுத்திரத்தில் பொறுப்பாளா் மகாராஜா, அரிகேசவநல்லூரில் அா்ஷத் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com