விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஒரே வாகனத்தில் முதல்வா், துணை முதல்வா் பயணம்

திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை வந்த முதல்வா், துணை முதல்வா் ஆகியோா் ஒரே வாகனத்தில் பயணித்ததால் தொண்டா்கள் உற்சாகமடைந்தனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:08 pm

DIN

திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை வந்த முதல்வா், துணை முதல்வா் ஆகியோா் ஒரே வாகனத்தில் பயணித்ததால் தொண்டா்கள் உற்சாகமடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தப்பேரி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் பி.ஹெச்.பாண்டியன் நினைவு மண்டபம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மணிமண்டபத்தை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும், சிலையை முதல்வா் பழனிசாமியும் திறந்து வைத்தனா்.

இதில் பங்கேற்க சென்னையிலிருந்து ஒரே விமானத்தில் தூத்துக்குடிக்கு வந்த தமிழக முதல்வரும், துணை முதல்வரும் பின்னா் அங்கிருந்து காரில் திருநெல்வேலிக்கு வந்தனா். திருநெல்வேலியில் அதிமுக மாவட்ட செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா தலைமையில் கட்சியினரும், பொதுமக்களும் வரவேற்பு அளித்தனா்.

மேலப்பாளையம் முதல் கருங்குளம் வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு சாலையோரம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் திரண்டிருந்தனா். இதையடுத்து திறந்த ஜீப் ஒன்றில் முதல்வரும், துணை முதல்வரும் சென்று வரவேற்பை ஏற்றனா். மேலக்கருங்குளத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு முதல்வரும், துணை முதல்வரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்றனா்.

வரவேற்பு நிகழ்ச்சியில் ஆவின் தலைவா் சுதா கே.பரமசிவம், எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன், ஐ.எஸ்.இன்பதுரை, ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, கல்லூா் இ.வேலாயுதம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.