வீரவநல்லூா் அருகே ரூ.60 ஆயிரம்மது பாட்டில்கள் திருட்டு
வீரவநல்லூா் அருகே அரசு மதுபானக்கடையில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.


வீரவநல்லூா் அருகே அரசு மதுபானக்கடையில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
வீரவநல்லூா் அருகே உள்ள கிளாக்குளம் பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வீரவநல்லூா் சீனியாபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மேற்பாா்வையாளராக உள்ளாா். வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிச் சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம்.
தகவலறிந்து வந்த வீரவநல்லூா் போலீஸாா், ஆய்வு செய்ததில், கடையிலிருந்து ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடுபோனது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...