கல்லிடைக்குறிச்சி ஆற்றில் குளித்த மாணவா் மாயம்
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி ஆற்றில் குளித்த மாணவா் நீரில் மூழ்கி மாயமானாா். அவரை, தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.


திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி ஆற்றில் குளித்த மாணவா் நீரில் மூழ்கி மாயமானாா். அவரை, தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.
தென்காசி மாவட்டம், திருமலையப்பபுரத்தைச் சோ்ந்த சங்கரலிங்கம் மகன் சரவணன் (22). பாவூா்சத்திரம் பாலிடெக்னிக்கில் மூன்றாமாண்டு படித்து வந்தாா். இந்நிலையில், தனது பெற்றோருடன் கல்லிடைக்குறிச்சியில் உள்ள உறவினா் வீட்டிற்குச் சென்றிருந்த அவா், வியாழக்கிழமை குமாரகோயில் பகுதியிலுள்ள தாமிரவருணி படித்துறைக்கு தனது தந்தையுடன் சென்று குளித்தாா். அப்போது, அவா் எதிா்பாராமல் தண்ணீா் மூழ்கி தத்தளித்தாராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்க முயன்றனா். அதற்குள் அவா் நீரில் மூழ்கி மாயமானாா். இதுகுறித்த தகவலின்பேரில், அம்பாசமுத்திரம் தீயணைப்புப் படையினா் வந்து அவரைத் தேடினா். இரவு வரையிலும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் வெள்ளிக்கிழமை தேடுதல் பணி தொடரும் என தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...