மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நெல்லையில் மிதமான மழை

திருநெல்வேலி மாநகரின் பல்வேறு இடங்களிலும் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:17 pm

DIN

திருநெல்வேலி மாநகரின் பல்வேறு இடங்களிலும் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்த தையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடா்மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாநகரை பொருத்தமட்டில் வியாழக்கிழமை மழை ஓய்ந்திருந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

முற்பகல் நேரத்தில் பாளையங்கோட்டை, மேலப்பாளையம் , கேடிசி நகா், தச்சநல்லூா், திருநெல்வேலி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: அம்பாசமுத்திரம்-3, சேரன்மகாதேவி-2, மணிமுத்தாறு-5.80, பாளையம்கோட்டை-5, பாபநாசம் -7,ராதாபுரம் -20, திருநெல்வேலி-1.60.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.