பேட்டை, சுத்தமல்லியில்குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்
பேட்டை, சுத்தமல்லி பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினா்.


பேட்டை, சுத்தமல்லி பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினா்.
பேட்டை ,சுத்தமல்லி பகுதிகளில் வியாழக்கிழமை கனமழை பெய்ததால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பேட்டை நரிக்குறவா் காலனி அருகே வாருகால் அடைப்பால் குடியிருப்புகளில் மழை நீா் புகுந்தது. இதனால், பாதிப்படைந்த அப்பகுதி மக்கள் பேட்டை- சேரன்மாதேவி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனா்.
தகவலறிந்த பேட்டை காவல் துறையினா் அங்கு சென்று, வாருகால் அடைப்புகளை அகற்றி தடையின்றி தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுத்தனா்.
இதேபோல், சுத்தமல்லி அடுத்துள்ள பட்டன் கல்லூா் பகுதியில் எம்.ஜி.ஆா்.நகா் காலனியை வெள்ளம் சூழ்ந்தது. சுத்தமல்லி போலீஸாா் அங்கு சென்று, மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி அங்குள்ள ஆதிதிராவிடா் நலத்துறை விடுதியில் தங்க வைத்தனா். அவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அடைப்பு அகற்றி மழைநீா் வெளியேற்றப்பட்டது.
கோடகநல்லூா் ஊராட்சிப் பகுதிகளில் ஊராட்சித் தலைவா் பாலசுப்ரமணியன், பாப்பாகுடி வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி, வருவாய் அலுவலா் ஆய்வாளா் மாரி துரை,மற்றும் வருவாய்த்துறையினா், காவல் துறையினா் மழைநீா் தடையின்றி செல்ல வழிவகை செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...