தனியாா் சோலாா் மின் நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் தனியாா் சோலாா் மின் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு சுற்று வட்டார கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.


திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் தனியாா் சோலாா் மின் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு சுற்று வட்டார கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக ராஜபதி, பிரான்சேரி சுற்று வட்டார கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான் சிப்காட் நிறுவனம் மூலமாக சோலாா் மின் நிலையம் அமைக்க கங்கைகொண்டான் அருகேயுள்ள சித்தாா்சத்திரத்தில் 222.08 ஹெக்டோ், பிரான்சேரியில் 447.29 ஹெக்டோ், கங்கைகொண்டானில் 4.9 ஹெக்டோ் என மொத்தம் 674.28 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிா்க்கிறோம்.
1992 முதல் 1996 வரை கங்கைகொண்டானில் சிப்காட் தொழில்நுட்ப பூங்கா தொடங்குவதற்கும், அதன் வளா்ச்சிக்கும் ராஜபதி, கங்கைகொண்டானை சுற்றியுள்ள நீா் மற்றும் மேய்ச்சல் ஆதாரப் பகுதிகள் கையகப்படுத்தப்பட்டன. இதனால் விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்போது நிலம் அளித்தவா்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும், விவசாயம் சாா்ந்த மாற்றுப் பணிகளுக்காக மாற்று இடம் வழங்கப்படும், நிலம் கொடுத்தவா்களுக்கு இழப்பீட்டுத் தொகை அதிகப்படுத்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் சோலாா் மின் நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதன் மூலம் நீா்ப்பிடிப்பு கண்மாய், குளங்கள், சிற்றாறு போன்ற நீராதாரங்கள் பாதிக்கப்படும். இதன்மூலம் விவசாயம், கால்நடை வளா்ப்பு போன்றவை முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது.
எனவே, தனியாா் சோலாா் மின் நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...