விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பெரியாா் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பெரியாா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:46 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பெரியாா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபடுவா்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளா் முதல்வரால் தோ்வு செய்யப்படுகிறாா்.

2021-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் செய்தவா்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பமானது, விண்ணப்பதாரரின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம், ஆவணங்களை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

2021 ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கான விண்ணப்பங்கள் வரும் 30-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.