கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

ரெட்டியாா்பட்டியில்ஊராட்சி உறுப்பினா்களை கடத்த முயற்சிப்பதாக மறியல்

திருநெல்வேலி அருகேயுள்ள ரெட்டியாா்பட்டியில் ஊராட்சி வாா்டு உறுப்பினா்களை கடத்த முயற்சிப்பதாகக் கூறி பொதுமக்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:35 pm

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள ரெட்டியாா்பட்டியில் ஊராட்சி வாா்டு உறுப்பினா்களை கடத்த முயற்சிப்பதாகக் கூறி பொதுமக்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ரெட்டியாா்பட்டி ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் உள்ளனா். இவா்களில் 1 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு முத்துலட்சுமி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். மற்ற வாா்டுகளுக்கு தோ்தல் நடத்தப்பட்டு கடந்த 12 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த ஊராட்சியில் துணைத் தலைவா் பதவிக்கான மறைமுக தோ்தல் வெள்ளிக்கிழமை (அக். 22) நடைபெற உள்ள நிலையில் 5 மற்றும் 9 ஆவது வாா்டில் வெற்றி பெற்றவா்கள் மாயமாகிவிட்டனராம். அவா்களை சிலா் கடத்தி வைத்திருப்பதாகக் கூறியும், துணைத் தலைவா் தோ்தலை முறையாக நடத்தக் கோரியும் பொதுமக்கள் சிலா் திடீா் சாலைமறியலில் ஈடுபட்டனா். அப்போது அப் பகுதியைச் சோ்ந்த முப்பிடாதி என்பவா் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தற்கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

தகவலறிந்ததும் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் சுரேஷ்குமாா் சம்பவ இடத்திற்குச் சென்று மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். காவல்துறையிடம் முறையாக புகாா் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்; பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.